உலகில் கால்பந்தாட்டத்தில் தலைசிறந்த வீரர்களாக விளங்குபவர்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி. இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு அடிக்கடி ரசிகர்கள் விவாதத்தில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் பிரபல போர்ப்ஸ் இதழ் வருடம் தோறும் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிலும் அதிக சம்பளம் வாங்கும் 10 வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி மெஸ்ஸியை விட ரொனால்டோ இரண்டு மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார்.

அதாவது அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து 4-வது முறையாக ரொனால்டோ முதலிடத்தை பிடித்துள்ளார். இவருடைய சம்பளம் 260 மில்லியன் டாலர் ஆகும். அதன் பிறகு 2-ம் இடத்தில் பிரபல கோல்ப் வீரர் ஜான் ரஹம் சவுதி இருக்கிறார். இதைத்தொடர்ந்து 3-வது இடத்தில் லியோனல் மெஸ்ஸி இருக்கிறார். இவருடைய சம்பளம் 135 மில்லியன் டாலராகும். மேலும் கடந்த வருடம் இரண்டாம் இடத்தில் இருந்த மெஸ்ஸி தற்போது சம்பளம் குறைந்ததால் 3-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.