தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் பொது மக்களுடைய பயன்பாட்டிற்காக மாதம் தோறும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை  பொறுத்து அரிசி கோதுமை, சர்க்கரை, பருப்பு, எண்ணெய், பச்சரிசி போன்றவை  வழங்கப்பட்டு வருகிறது. இதில் அரிசி, கோதுமை போன்றவற்றை மத்திய மாநில அரசுகள் இலவச மானிய ஒதுக்கீட்டின் கீழ் வழங்கி வருகிறது. மேலும் ஒரு லிட்டர் பாமாயில் ரூபாய் 25, ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் 25, பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஒரு கிலோ 30 என்று  மானிய  விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பருப்பானது கடந்த 2007 ஆம் வருடம் முதல் திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு அப்போது முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சற்று முன் வரை துவரம் பருப்பின் சிறப்பு பொதுவிநியோக திட்டத்திற்காக கால அவகாசம் செப்டம்பர் மாதத்தோடு முடிவடைய இருந்த நிலையில் இந்த திட்டத்திற்கான அவகாசத்தை வரும் டிசம்பர் மாதம் வரை நீட்டி இது தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளி  சந்தைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு வந்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.