
கேரளாவே சேர்ந்த ஒருவர் தனது திருமண அழைப்பிதழை ரேஷன் கார்டு ஸ்டைலில் அச்சடித்துள்ளார் . ஜோதிஷ் என்பவர் சிறுவயதில் தனது அம்மாவுக்கு உதவி செய்வதற்காக அடிக்கடி ரேஷன் கடைக்கு சென்று வந்துள்ளார். காலப்போக்கில் அந்த பகுதியைச் சேர்ந்த நபர்கள் ஜோதிஷை ரேஷன் கடை பையன் என செல்லமாக அழைக்க ஆரம்பித்தனர்.
இதனை நினைவு கூர்ந்த ஜோதிஷ் தனது திருமண அழைப்பிதழை புது ஸ்டைலில் அச்சிட நினைத்தார். தனது திருமண அழைப்பிதழை ரேஷன் கார்டு ஸ்டைலில் அச்சடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.