இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி இந்தியாவில் அந்தியோதயா அன்னை யோஜனா மற்றும் முன்னுரிமை வீட்டு திட்ட பலன்களை பெறுவதற்கு ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆதார் கார்டு ரேஷன் அட்டையுடன் இணைத்தால் மட்டுமே பொது மக்களுக்கு ரேஷன் வழங்கப்படும் எனவும் இதற்கு முன்னதாக ரேஷன் கடை ஆதாரத்துடன் இணைப்பதற்கு ஜூன் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணெய் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என எதிர் வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். ஆஃப்லைனில் இணைப்பதற்கு அருகில் உள்ள அரசு அலுவலகத்திற்கும் ஆன்லைன் மூலமாக ஆதரையும் இணைக்கலாம்.

முதலில் உங்கள் மாநிலத்தின் பொது விநியோக அமைப்பு போர்ட்டலைத் திறந்து  ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இணைக்கும் லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு ரேஷன் கார்டு எண், ஆதார் எண், மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிட்டு, ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்கலாம்.