
தமிழகத்தில் அடுத்த மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு சார்பில் சிறப்பு தொகுப்பு என்பது வழங்கப்படும். அந்த வகையில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையையும் முன்னிட்டு பொங்கல் பரிசு தொகை எப்போது வழங்கப்படும் என்று அறிவிப்பை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
அதாவது ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட சிறப்பு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும். இதுவரை ஆயிரம் ரூபாய் குறித்த அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுக்கு பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே வழங்கப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான முறையான அறிவிப்பை அரசு வெளியிடும் என்றும் கூறியுள்ளார்.