தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் இதற்கிடையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை என்று பல புகார்கள் வருகிறது இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அதனை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.

அது மட்டும் அல்லாமல் மாத இறுதியில் குடும்ப அட்டைதாரர்கள் வாங்காத பொருட்களுக்கும் வாங்கியதாக பதிவு செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அரிசி முட்டைகள், சர்க்கரை மூட்டை, பருப்பு பாக்கெட் ஆகிய அனைத்திலும் தமிழக அரசின் முத்திரை மற்றும் கியூ ஆர் கோடு பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அரசு முத்திரை மற்றும் கியூ ஆர் கோடு பதிக்கப்பட்ட பொருட்கள் கடத்தப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ பொதுமக்கள் யாரும் அதனை வாங்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.