தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து விடுகின்றன. இது தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல் பல எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட வருகின்றன. இந்நிலையில் ரேஷன் அரிசியை விற்க முயன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக பேட்டி அளித்த அவர், செறி ஊட்டப்பட்ட அரிசி என்பது பிளாஸ்டிக் அரிசி என்று சிலர் நினைக்கின்றனர். செறிஊட்டப்பட்ட வரிசையில் நூறில் 1- இல் தான் வைட்டமின்கள் இருக்கும்.வளர்ச்சி குறைவு மற்றும் ரத்தசோகை உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்களுக்காகவே வைட்டமின்கள் செறி ஊட்டப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.