தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி ஆக எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற புகைப்பட கண்காட்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் தொடர்ந்து சில நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கண்காட்சியை பலரும் பார்வையிட்டு வருகிறார்கள். அதில் ஸ்பெஷல் என்னவென்றால் அங்கு மிசாவின்போது சிறையில் ஸ்டாலின் இருந்த காட்சியை அப்படியே தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். அந்த சிறைக்குள் சென்று பார்த்த ஸ்டாலின் அங்கு அமைக்கப்பட்டிருந்த திண்ணையில் சற்று நேரம் அமர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கிப் போனார். அந்த கண்காட்சியில் அவரின் தந்தை கருணாநிதி மருத்துவமனையில் இருந்த கடைசி நிமிடங்கள் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புகைப்பட கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் சகோதரி செல்வி பார்வையிட்டார். அப்போது மிசா சட்டத்தில்ஸ்டாலின் சிறையில் இருந்த காட்சியையும் கருணாநிதியும் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கிய போது ஸ்டாலின் கலங்கி நின்ற புகைப்படத்தையும் பார்த்து சொல்ல முடியாத துயரத்தில் செல்வி கண்கலங்கி அழுதார். அது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.