உத்திரபிரதேசம் மாநில அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு உதவும் விதமாக ரேஷன் கடைகளை பொது சேவை மையங்களாக மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர் ஆதார் மற்றும் பான் கார்டு புதுப்பித்தல் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற அனைத்து வசதிகளையும் பெற முடியும். இனி ஆன்லைன் மூலமாக பணிகளை முடிக்க நகர்ப்புறங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த பொது சேவை மையங்களில் அரசு ஊழியர்களை பணி அமர்த்துவதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.

இமாச்சலப் மாநில அரசு இரண்டு மாதங்களுக்கான ரேஷன் பொருள்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. அந்த மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்த பருவமழை காரணமாக பலரும் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டதால் இதனை கருது ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான ரேஷன் பொருட்களை சேர்த்து வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.