நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி மற்றும் கோதுமை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆனந்தாச்சா ஷீதா என்ற பெயரில் நூறு ரூபாய்க்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் மூலமாக தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், ரவை, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை 100 ரூபாய்க்கு வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சலுகை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் நடைபாண்டி விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் இந்த பொருட்களை வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.