தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அரிசி பருப்பு போன்ற அத்யாவசியமான பொருட்கள் கிடைக்கிறது. இந்த பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் நிலையில் கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களும் கிடைக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பயன்பெற்று வரும் நிலையில் டீ தூள், உப்பு மற்றும் சாம்பார் பொடி போன்ற சில மளிகை பொருட்கள் கூட ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்களை பொதுமக்கள் வேண்டாம் என்று கூறினால் ரேஷன் கடை ஊழியர்கள் வாங்க சொல்லி கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதன் காரணமாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தற்போது ஒரு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது டீத்தூள் மற்றும் உப்பு போன்ற மளிகை பொருட்களை பொதுமக்கள் வாங்க விருப்பமில்லை என்று கூறினால் அவர்களை கட்டாயப்படுத்தி வாங்க வைக்க கூடாது என்று தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதனை மீறி செயல்படும் ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.