இந்த வருடம் தீபாவளி பண்டிகை ஆனது நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை  கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் வெளியூர்களிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் செல்வது வழக்கம். இவ்வாறு அதிகப்படியான மக்கள் செல்வதால் கூட்ட நெரிசலை தவிர்க்க  ரயில்களும் பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். இவ்வாறு சிறப்பு ரயில்களை விட்டால் கூட மக்கள் கூட்டத்திற்கு ஈடு செய்ய முடியாது. இதனால் பலர் தீபாவளிக்கு செல்வதற்கு முன்பெ டிக்கெட்டை  ரிசர்வ் செய்து விடுவது சிறந்தது.

அந்த வகையில் நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்காக ரயில் முன்பதிவு நாளை தொடங்க இருக்கிறது. காலை 8 மணிக்கு இந்த முன்பதிவு தொடங்க உள்ளது. முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் ஒன்பதாம் தேதி பயணம் செய்யலாம். தீபாவளிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே சொந்த ஊரில் இருக்கலாம். பொதுவாகவே தீபாவளி, பொங்கல் பண்டிகை முன்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே முடிந்துவிடும். பெரும்பாலானவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வதால் ரயில் நிலையங்களில் கியூவில் நிற்கும் பலருக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். எனவே உடனே முன்பதிவு செய்ய தயாராகுங்கள்.