குஜராத் மாநிலத்தில் கடற்கரையில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கண்டுபிடித்துள்ளனர். இந்திய கடலோர காவல் படையினர் சுமார் 14 பாகிஸ்தானியர்களை கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து சுமார் 400 கோடி மதிப்புள்ள 90 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போர்பந்தர் அருகே கடந்த மார்ச் மாதம் 12-ஆம் தேதி சுமார் 480 கோடி மதிப்பில் ஆன போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் நடப்பாண்டில் இதுவரை கடலோர காவல்துறையினரால் அங்கு சுமார் 3,400 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.