மக்களவைத் தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதனை அடுத்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.  அது மட்டும் இன்றி அரசியல் கட்சியினர் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில்,  லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் ரூ.509 கோடி தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றது அம்பலமாகியுள்ளதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சியில் குலுக்கல் சீட்டு, லாட்டரி சீட்டு, ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டது. ஆனால், மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுகவை வரும் தேர்தலில் மக்கள் தோற்கடிப்பார்கள் எனத் தெரிவித்தார்.