கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் என்ற பகுதியில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். அவரது வீட்டில் நாய் தங்குவதற்காக ஒரு அறை கட்டியுள்ளார். இதை அந்த தொழிலதிபர் புலம்பெயர் தொழிலாளி ஒருவருக்கு ரூ.500-க்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் தொழிலதிபரிடமும் புலம்பெயர் தொழிலாளியிடமும் விசாரணை நடத்தினர்.

இதைப்பற்றி அந்த தொழிலாளியிடம் அதிகாரிகள் கேட்டபோது அவர் தன்னுடைய விருப்பத்தின் பெயரில்தான் அங்கு தங்கியிருப்பதாக கூறினார். இதனால் அந்தத் தொழிலாளியை அதிகாரிகள் அவர் தங்கி இருந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அந்த தொழிலாளிக்கு வருமானம் குறைவாக இருப்பதால்  தான் நாய்க்காக கட்டப்பட்டிருந்த அறையில் தங்கியிருந்தார் என்பது தெரியவந்தது.