இந்தியாவில் நிதி நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களுக்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு PM SVANidhi scheme (பிஎம் ஸ்வாநிதி திட்டம்) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தில் பயன் அடைய விருப்பமுள்ளவர்கள் http://pmsvanidhi.mohua.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பித்தால் எந்தவித உத்திரவாதமும் இல்லாமல் கடன் வழங்கப்படும்.

இதில் முதலில் பத்தாயிரம் ரூபாய் அதன் பிறகு 20 ஆயிரம் ரூபாய் என ஐம்பதாயிரம் ரூபாய் வரை வணிகர்கள் கடன் வாங்கிக் கொள்ளலாம். இதில் கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தினால் வட்டி மானியமும் கிடைக்கும். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்களது தொழிலை மீண்டும் தொடங்க மத்திய அரசு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.