மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், ஒரு பயனாளிக்கு ஆண்டு தோறும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும். கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) போன்றவர்கள் இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும், இந்த திட்டத்தின் கீழ் உள்ள ஊனமுற்றவர்கள் அல்லது ஊனமுற்ற குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்கள், பழங்குடியினர்கள் மற்றும் ஆதரவற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இலவச மருத்துவ சேவைகளை பெறலாம். இந்த திட்டத்திற்கான தகுதிகளைப் பற்றிய தகவலுக்கு 14555 என்ற இலவச எண்ணைக் கொண்டு தொடர்பு கொள்ளலாம்.