
நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். பொதுவாக ஆதார் மற்றும் ரேஷன் இரண்டும் முக்கியமான அடையாள ஆவணமாக திகழும் நிலையில் அரசு மற்றும் அரசு சாரா பல்வேறு செயல்களுக்கு தற்போது ஆதார் மிகுந்த பயனுள்ள ஒரு ஆவணமாகும். இந்நிலையில் தமிழக அரசு தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த 2 திட்டங்களில் பயன் பெறுவதற்கு இனி ஆதார் கார்டு கட்டாயம் என்று அறிவித்துள்ளது.
அதன்படி CM Arise, தொல்குடி, நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் ஆகிய திட்டங்களுக்கு அவசியம். இதில் நன்னில மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 5 லட்ச ரூபாய் வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. அதன்பிறகு CM Arise திட்டத்தில் தொழில் தொடங்குவதற்கு 10 லட்ச ரூபாய் வரையிலான கடன் 35% வட்டி மானியத்துடன் வழங்கப்படுகிறது. மேலும் இந்த இரு திட்டங்களிலும் பயன்பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.