ஆந்திர மாநிலத்தில் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவையான உணவு தேவையை பூர்த்தி செய்ய அண்ணா உணவகத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேஷ் மாநிலம் முழுவதும் சந்திரபாபு நாயுடு அவர்களால் சுமார் 100 அண்ணா உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் நோக்கத்துடன் தான் இந்த திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆந்திரா அரசு ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் உணவு பாதுகாப்பு வழங்குவதை முக்கிய நடவடிக்கையாக கருதுகிறது.