திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சை வரத்து குறைந்ததால் ஒரு எலுமிச்சை பத்து ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. திண்டுக்கல் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் விளையும் எலுமிச்சை பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது சீசன் என்பதால் தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக விலை உயர்ந்துள்ளது. இதன் படி, சராசரியாக ஒரு நாளைக்கு 20 டன் எலுமிச்சை பழம் விற்பனைக்கு வரும் நிலையில், தற்போது இரண்டு டன் எலுமிச்சை பழம் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன.

வழக்கமாக 50 கிலோ எடை கொண்ட எலுமிச்சை பழ மூட்டை 2000 முதல் 2500 வரை விற்பனையாகும் நிலையில், வரத்து குறைவால் 8000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எலுமிச்சை பழத்தின் தரத்தை பொறுத்து ஒரு பழம் ஆறு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள். வெயிலின் தாக்கம் அதிகரித்தால் மேலும் இரண்டு வாரங்களுக்கு விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.