2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும் அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் புழக்கத்திலிருந்து அகற்றவும் புதிய நோட்டுகளை அச்சிடுவதையும் ரிசர்வ் வங்கி நிறுத்தி உள்ளது.

இனி மக்களுக்கு வங்கிகளில் அல்லது ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டு விநியோகம் செய்யப்பட மாட்டாது. அதே சமயம் ஒரே நேரத்தில் ஒரு நபர் 20000 ரூபாய் வரை வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றவோ அல்லது வரவு வைக்கவும் முடியும். இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகளில் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது