பிரபல ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்புது ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஜியோவுக்கு கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஜியோ நிறுவனமானது தற்போது மலிவு விலையில் 5ஜி ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்த திட்டத்தில் 198 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 14 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதில் 5g சேவை எனில் அன்லிமிடெட் டேட்டாவும், 4ஜி சேவை எனில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவும் கிடைக்கும். மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்ற வசதிகளும் கிடைக்கும்.