கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் கொச்சைப் படுத்தி பேசியதாக திமுகவினர் இணையத்தில் இந்த வீடியோவை பரப்பி வருகின்றனர். அதேநேரம், அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று நாம் தமிழர் கட்சியினர் கூறுகின்றனர்.