சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னத்தை வைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு சுமார் 81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில் அண்மையில் நடைபெற்ற கருத்து கேட்ப கூட்டத்தில் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார். அதன் பிறகு பல அரசியல் கட்சிகளும் கடலுக்குள் பேனா சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜக கட்சியில் இருந்து விலகிய கடலுக்குள் பேனாசிலை வைப்பது குறித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் ரெட்‌ ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் 100 கோடி பட்ஜெட்டில் படங்களை எடுப்பதற்கு பதிலாக அவர்களால் கடலுக்குள் பேனாசிலை கட்ட முடியும். ஆனால் அது அரசாங்கத்தின் இடம். அந்த இடத்தை தனியாரால் சொந்தம் கொண்ட முடியாது. அதுதான் தற்போது பிரச்சனை. அதன் பிறகு கடற்கரையில் உள்ள அனைத்து இடங்களும் தலைவர்களின் நினைவிடங்களாக மாறும் இடமாக அமைந்து விடும். பிரச்சனை பணத்தைப் பற்றியது அல்ல அது இடத்தை பற்றியது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவின் மூலம் காயத்ரி ரகுராம் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் வைப்பதை சுற்றி வளைத்து எதிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.