2024 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் அரசு விருதுகளுக்கு சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் சமூக சேவகருக்கு 50,000 ரூபாய் மற்றும் சான்று, தொண்டு நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றது. இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் மே 21 ஆம் தேதி முதல் https://awards.tn.gov.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.