தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வரும் நிலையில் அரசு அவ்வப்போது மக்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும், பிற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பகல் ஒரு மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. மதியம் வழங்கப்படும் இடைவேளை நேரத்தில் ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளின் நேரத்தை விரைவில் மாற்ற கூட்டுறவு மற்றும் உணவுத்துறை முடிவு செய்துள்ளது.