தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் வருகின்ற ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும். எனவே ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு கமலாலயத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என தெரிவித்தால் உணவு வழங்க தயார் என்று செல்வப் பெருந்தகை அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை கமலாலயத்தில் ஒருவர் மட்டுமே இருந்த வரலாற்றை அண்ணாமலைக்கு நினைவூட்டுகிறோம். மோடி ஆட்சியில் 10 ஆண்டுகள் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது குறித்து புத்தகம் வழங்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.