சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கான விருதுகள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளதால் விண்ணப்பிக்க வேண்டியவர்களின் தகுதிகள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேலாண்மையாக பணிபுரிந்து மகளிர் நலனுக்காக தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணி செய்யும் சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரரின் கருத்துரு தமிழ் 2 மற்றும் ஆங்கிலம் 2 புத்தக படிவத்தில் தயாரிக்கப்பட்டு புகைப்படத்துடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.