சேலம் மாவட்டம் மத்திய சிறையில் சுப்பிரமணி என்பவர் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். அந்த சிறையில் உள்ள பேக்கரியில் ஜெயிலில் உள்ள கைதிகளின் மூலமாக பல்வேறு வகையான திண்பண்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதனை சிறைக் காவலரான சுப்ரமணி என்பவர் கைதிகளுக்கு விற்பனை செய்து வந்தார். ஆனால் அதற்கான தொகையை சிறை வரவு செலவு கணக்கில் காட்டாமல் சுப்ரமணி தன்னுடைய சொந்த கணக்கில் வரவு வைத்துள்ளார்.

இது குறித்து அறிந்த உயர் அதிகாரிகள் சுப்ரமணியின் வங்கி கணக்கை சோதனை செய்து பார்த்தனர். அப்போது சுப்ரமணி இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இறுதியாக டி.ஐ.ஜி. சுப்ரமணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.