
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆவதற்காக இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுகிறார்கள். இப்படி ரீல்ஸ் வீடியோ எடுப்பதில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் சில சமயங்களில் இளைஞர்கள் விபரீதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது இளம் பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்திலிருந்து ரீல்ஸ் வீடியோ எடுத்தார். அப்போது ரயில் பக்கத்தில் வந்த நிலையில் ரயிலுக்குள் இருந்த என்ஜின் டிரைவர் உடனடியாக இளம்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து உயிரை காப்பாற்றினார். நூலிழையில் அந்த பெண் உயிர் தப்பிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் என்ஜின் டிரைவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் ரீல்ஸ் மோகத்தால் ஆபத்தை உணராமல் ரிலீஸ் வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு பலரும் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram