இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. குறிப்பாக ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்கள் விபரீதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது மற்றவர்களுக்கு தொந்தரவாக அமைவதோடு சில நேரங்களில் அவர்களின் உயிருக்கே உலை வைக்கிறது.

இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் பதேபூர் பகுதியில் ஒரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு சாலையில் ஒரு காரில் வந்த வாலிபர் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு ரீல்ஸ் எடுப்பதற்காக பின்னர் சாலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். அவர் 2024 என்று எழுதியுள்ளார். பின்னர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை கைது செய்துள்ளனர்.