நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலானது. இந்த போஸ்டரில் விஜய் வாகனத்தின் மீது நின்று கொண்டு அவருடைய ரசிகர்களோடு செல்பி எடுப்பது போன்று போஸ்டர் வெளியாகி வைரலாகி வந்தது. அரசியல்வாதியாக மாறியுள்ள விஜய்யின் கடைசி படம் இது என்பதால் ரசிகர்கள் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது நடிகர் விஜய் அரசியலில் பிசியாக இருப்பதால் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாத இறுதிக்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை 2026 பொங்கல் அன்று திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் OTT உரிமை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நெட்பிளிக்ஸ்  நிறுவனமானது பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த தொகை எவ்வளவு என்பது குறித்து வெளிவரவில்லை. இந்த நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமானது 80 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாக சினிமா  வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.