
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருந்த தற்போது கதாநாயகனாக வளர்ந்தவர் சூரி. இவரது நடிப்பில் கடந்த வாரம் மாமன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ள நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படம் ஒரு ஆறு வயது சிறுவனுக்கும் தாய் மாமாவுக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான படமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சூரி ஜீ தமிழில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 3 குழந்தைகளுக்கு தாயான பஞ்சமி என்பவர் மிகச் சிறப்பான முறையில் நடனம் ஆடி வரும் நிலையில் அவருக்கு நடிகர் சூரி ஒரு வாக்கு கொடுத்தார்.
அதாவது பஞ்சமி தான் கடந்து வந்த வலி நிறைந்த பாதைகளை சூரியிடம் கூறிய நிலையில் என் 3 குழந்தைகளுக்கும் இன்னும் காது குத்தவில்லை என்றார். இதைக் கேட்டவுடன் தாய் மாமனாக இருந்து உங்கள் 3 குழந்தைகளுக்கும் என் சொந்த செலவில் நானே காது குத்தும் விழாவினை நடத்தி வைக்கிறேன் என்றார்.
அவர் சொன்னபடியே தற்போது பஞ்சமியின் குழந்தைகளுக்கு அவரது சொந்த செலவில் காது குத்து விழாவினை நடத்தி வைத்தார். இன்று காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலில் காது குத்தி மொட்டை போடும் விழா நடைபெற்ற நிலையில் நடிகர் சூரி அவரது மடியில் வைத்து தாய் மாமனாக இதனை செய்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் நடிகர் சூரியை பாராட்டி வருகின்றனர்
View this post on Instagram