சாட்டிலைட்டில் இருந்து பார்த்தால் இந்த அயோத்தி ராமர் கோவில் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படத்தை இஸ்ரோ இணையதளத்தில் பகிர்ந்து உள்ளது. 2.7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ராமர் கோவில் தளத்தை முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்திய ரிமோட் சென்சிங் சாட்டிலைட் விண்வெளியில் இருந்து போட்டோ எடுத்துள்ளது. இந்த புகைப்படம் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராமர் சிலையை கோவிலில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை கண்டறிந்ததே  இஸ்ரோவின் விண்கலம் தான் எனவும் கூறப்படுகிறது.