சீனாவின் சிச்சுவான் பகுதியில் குவாங்சோ டுயோய் நெட்வொர்க் என்ற வீடியோ கேம் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் லியு லின்சு என்பவர் கேம் ஆர்ட் எடிட்டராக பணிபுரிந்தார். இந்நிலையில் லியுவின் தனிப்பட்ட நடத்தையில் அந்த நிறுவனம் ஏமாற்றம் அடைந்தது. இதனால் அந்த நிறுவனம் அவரை தானாக முன்வந்து பணியை ராஜினாமா செய்யும்படி கூறியது. ஆனால் லியு அதை மறுத்துவிட்டார். இதையடுத்து நிறுவனத்தின் நிர்வாகிகள் லியுவை ஒரு  இருட்டு அறையில் அடைத்து வைத்து, அவரது செல்போனை பறிமுதல் செய்ததோடு, 4 நாட்கள் சித்ரவதை செய்துள்ளார்.

இதற்கிடையில், லியுவின் மனைவி தனது கணவரைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, மேற்கண்ட ​​​​விவரம் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லியு தன் பதவியை ராஜினாமா செய்தார். பின் அந்த நிறுவனம் அவரை வீட்டிற்கு அனுப்பியது. அதோடு அவர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தியது. இருப்பினும் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட லீயுவுக்கு சம்மந்தப்பட்ட நிறுவனம் ரூ.44 லட்சம் இழப்பிடு வழங்குமாறு கூறி தீர்ப்பு வழங்கியது.