
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, டெல்லியில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியும் கலந்துக்கொண்டார். அனால் அவருக்கு கடைசிக்கு முந்திய வரிசையில் இடம் ஒதுக்கி, மத்திய பாஜக அரசு அவமதித்தது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு பரிசளிக்க அவர்களை முன்வரிசையில் உட்கார வைத்ததால் இந்த நிகழ்வு ஏற்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா உள்ளிட்ட பலர் ஒலிம்பிக் வீரர்களை மதிக்கவில்லை. இதுமட்டுமின்றி மல்லிகார்ஜுன கார்கேவின் இருக்கை கூட 5- வது வரிசையில் தான் இருந்தது. ஆனால் அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லை. இது எல்லாம் ராகுல் காந்திக்கு ஒரு பொருட்டல்ல.
ஜனநாயகத்தில் ஆற்றல் மிக்கவராக அவர் செயல்பட்டு வருகிறார். இதனால் ஆளும் கட்சியான மோடி அரசுக்கு இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவர்கள் காழ்ப்புணர்ச்சியோடு இத்தகைய செய்திகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம் என்று கூறினார்.