
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ரவி மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ரவி மோகன் இயக்குனர் கணேஷ் கே பாபுவுடன் சேர்ந்து தனது 34 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ரவிமோகன் கராத்தே மாஸ்டர் ஆகவும் அரசியல்வாதியாகவும் இருப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசரை பட குழு வெளியிட்டுள்ளது.
அந்த டீசரில் சட்டசபையில் ரவி மோகனின் கதாபாத்திரமான சண்முக பாபுவின் மற்றொரு பெயரை தெரிந்து கொள்ள முதலமைச்சர் ஆர்வம் காட்ட சலசலப்புக்கு பின் ரவி மோகன் தனது பெயரை கூறும் சமயத்தில் கராத்தே பாபு என்ற டைட்டிலை போட்டு அட்டகாசமான டீசரை பட குழு வெளியிட்டுள்ளது.
