ரயிலில் பயணம் மேற்கொள்பவர் எனில், ரயில்வேயின் இந்த விதியை கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் செய்யக்கூடாததை செய்து சிறைக்கு செல்லவேண்டிய நிலை நேரிடும். ரயிலில் உணவு பொருட்கள் தயாரிக்கப்படும் பேண்ட்ரி கோச் பேண்ட்ரி கார் எனவும் அழைக்கப்படுகிறது. ரயிலின் பேண்ட்ரி காரில் பயணம் மேற்கொள்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் தண்டனையாக சிறைக்கு போக வேண்டியிருக்கும்.

மேலும் அபராத தொகை விதிக்கப்படுகிறது. அதே நேரம் ஏதேனும் தேவைக்கு நீங்கள் பேண்ட்ரி பெட்டிக்குள் போகலாம். எனினும் அதில் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம். ரயில் நடைமேடைகள், ஓடும் ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டு உள்ளது. அதோடு ரயில்கள் மற்றும் ரயில்வே வளாகங்களில் மது அருந்துவது (அ) போதைப் பொருளை உட்கொள்வதும் தடைசெய்யப்பட்டு உள்ளது.

பலர் தங்களுக்கு தேவையானதை விட அதிக லக்கேஜ்களை ஏற்றிக்கொண்டு ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். அதே சமயத்தில் பயணிகள் ஆபத்தான பொருட்களை ரயிலில் எடுத்து செல்லவும் அனுமதியில்லை. இந்நிலையில் பிடிபட்டால் சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். ஆகவே சாமான்களை எடுத்து செல்வதற்கான நிலையான வரம்பை அறிந்துகொள்ள வேண்டும்.