இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகமும் அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள 53 முக்கிய வழித்தடங்களில் ரயில் வேகத்தை மணிக்கு 130 கிலோமீட்டர் ஆக அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதில் சென்னை மற்றும் மதுரை வழித்தடமும் அடங்கும். 130 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ரயிலை இயக்கப்படுவதன் மூலம் சென்னை மற்றும் மதுரை பயண நேரம் கணிசமாக குறையும். தொடர்ந்து 130 கிலோ மீட்டர் வேகத்திற்கு ஏற்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தும்படி பொது மேலாளர்களுக்கு ரயில்வே அமைச்சகம் முத்தரவிட்டுள்ளது.