இந்தியாவில் ஏராளமான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே புதிய அறிவிப்புகளை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், முற்றிலும் பார்வையற்ற பயணிகள் மற்றும் மற்றொரு நபரின் உதவி இல்லாமல் ரயிலில் பயணிக்க முடியாதவர்களுக்கு பல்வேறு விதமான மக்களுக்கும் ரயில் டிக்கெட் இந்திய ரயில்வே சலுகையை வழங்கி வருகிறது.

அதன்படி ரயிலில் பொது வகுப்பு, ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் 3 ஏசி பெட்டிகளில் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது. ஏசி ஒன்னு மற்றும் இரண்டு பெட்டிகளில் 50 சதவீதம் தள்ளுபடி ராஜதானி மற்றும் சதாப்தி போன்ற ரயில்களின் 3 ஏசியில் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு உதவி செய்வதற்காக உடன் சொல்லும் நபருக்கும் இந்த சலுகை உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.