டெங்குவுக்கு எதிரான போரை இந்திய அறிவித்து தடுப்பூசி தயாரிக்க தயாராகி வருகின்றது. ஹைதராபாத் நிறுவனமான இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் தடுப்பூசியை உருவாக்கி வருகின்றது. இந்த தடுப்பூசி வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்ப கட்ட சோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும் பாதகமான முடிவுகள் எதுவும் இல்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே இரண்டாம் கட்ட சோதனைகள் இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளில் நடைபெறும் எனவும் இந்த ஆண்டு 31,464 டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 36 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.