
ரயில்வே பாதுகாப்புத் துறையில் அனுமதிக்கப்பட்ட 10 இலட்சம் பணியிடங்களில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. RTI விண்ணப்பத்தின் மீது இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 14,429 லோகோ பைலட் பணியிடங்களும், 4,337 உதவி ஓட்டுநர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்காக 2004-14ஆம் வருடத்திற்கு இடைப்பட்ட காலத்தில் ரூ.70 ஆயிரம் கோடியும், 2014-24ல் ரூ.1.78 லட்சம் கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.