இந்தியாவில் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக ரயில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பல லட்சம் பயணிகள் பயணித்து வருகிறார்கள். இந்த நிலையில் பயணிகளுடைய தூங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது .ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் நடுத்தர பெர்த் ஒதுக்கப்பட்ட பயணிகள் எட்டு மணி நேரம் மட்டுமே தூங்க வேண்டும். முன்பு இந்த நேரம் 9 மணியாக இருந்த நிலையில் தற்போது இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும் என மாற்றப்பட்டுள்ளது.

இப்போது நடுத்தரப் பெர்த் இரவு 10 மணிக்கு பிறகு தான் திறக்க முடியும். காலை 6 மணிக்கு நடுத்தர பெர்த்தை  மூட வேண்டும். மிடில் பெர்த் பயணிகள் பகலில் தூங்கக் கூடாது. இதன் மூலமாக கீழ்ப் பெர்த் பயணிகள் எட்டு மணி நேரத்துக்கு பிறகு நடு பெர்த்தை மூடுமாறு கேட்க உரிமை இருக்கிறது. மேல் பெர்த்தில் உள்ள பயணிகள் பகல் நேரத்தில் கீழ்ப் பெர்த்தில் அமர்ந்து கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோய்வாய் பட்டவர்கள் நீண்ட நேரம் தூங்குவதற்கு சக பயணிகள் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.