இந்தியாவின் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் ரயில் பயணத்தை பலரும் விரும்புகிறார்கள். பொதுவாக ரயிலில் ஜெனரல் கோச், ஸ்லீப்பர், 3rd AC, 2nd AC, 1St AC போன்ற பெட்டிகள் இருக்கும். அதில் ஜெனரல் கோச்சுகள் ரயிலின் முன் மற்றும் பின் பக்கத்தில் இருக்கும். ஒவ்வொரு ரயிலின் அமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். என்ஜினை தொடர்ந்து AC – 3, AC – 2, ஸ்லீப்பர் கோச்சுகள் மற்றும் ரயிலின் பின்பக்கத்தை நோக்கி இறுதியாக ஜெனரல் பெட்டி பொருத்தப்பட்டு இருக்கும். இதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அதாவது ஜெனரல் கோச் எனப்படும் பொது பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ரயிலின் நடுப்பகுதியில் இதனை சேர்த்தால் அதிக எடை ஏற்பட்டு ரயில் சமநிலையில் இருக்காது. போர்டிங் டிபோர்டிங்கில் சிக்கல் ஏற்படும். ஜெனரல் compartment நடுவில் இருந்தால் அது இருக்கை அமைப்போடு மற்ற ஏற்பாடுகளையும் பாதிக்கும் என்பதால் பொது பெட்டிகளை ரயிலின் முன் மற்றும் பின்புறம் வைப்பதன் மூலம் பயணிகள் கூட்டம் சமமாக பிரிக்கப்படுகின்றது. திரும்பவும் பயணத்தில் இருபுறமும் என்ஜினை சேர்ப்பது ரயிலின் சமநிலையை பராமரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது.