நடிகை ஷைனி சாரா மகேஷிண்டே  பிரதிகாரம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்நிலையில் இவர் தமிழ் படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக ஒருவர் கூறி ஏமாற்றியதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு அழைப்பு ஒன்று வந்தது.  அதில் ஒருவர் ரஜினிகாந்தின் மனைவி வீட்டில் நடிக்க தேர்வு செய்துள்ளதாகவும் நடிகர் சங்க உறுப்பினர் கார்டு ஆதார் கார்டு அனைத்து நகல்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்குமாறு கூறினார். மலையாளத்தில் அப்படி ஒரு அட்டை கிடையாது என்று சொன்னதும் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறி 12,500 கேட்டார்.

அந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் இரண்டு நாட்கள் கழித்து பணம் தருகிறேன் என்று கூறினேன். முதல் தவணையாக உடனே செலுத்த வேண்டும் என்றதால் என்னுடைய சந்தேகம் அதிகரித்தது. என்னுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள சினிமா வட்டாரம் மூலமாக விசாரித்த போது அப்படி எல்லாம் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க எந்த தேர்வும் நடக்கவில்லை என்று கூறினார்கள். உடனே அந்த நபருக்கு கால் செய்து இது பற்றி கூறிய போது அழைப்பை துண்டித்து விட்டார். இதுபோன்று பலரும் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.