தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பார்ப்பதற்காக அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டருக்கு சென்றபோது கூட்டணி நெரிசலில் சிக்கிய ரேவதி  என்ற ரசிகை இறந்த நிலையில் அவருடைய மகன் ஸ்ரீதேஜ் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தான். தற்போது அந்த சிறுவனுக்கு நினைவு திரும்பிய நிலையில் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளான். இந்த விவகாரம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட பின்  ஜாமினில் வெளியே வந்த நிலையில் நேற்று அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்திற்கு தெலுங்கானா முதல்வர் அல்லு அர்ஜுன் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் பாதிக்கப்பட்ட சிறுவனின் சிகிச்சைக்காக இரண்டு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு கோடி ரூபாயும், புஷ்பா பட இயக்குனர் சுகுமார் 50 லட்ச ரூபாயும், தயாரிப்பாளர்கள் 50 லட்ச ரூபாயும் வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே தயாரிப்பாளர்கள் 50 லட்ச ரூபாய் வழங்கி விட்டனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் சிறுவனின் தந்தையும் அல்லு அர்ஜுன் தங்கள் குடும்பத்திற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்துள்ளதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.