தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீசான மகாராஜா திரைப்படம் 100 கோடி ரூபாய் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் நெட்பிளிக்சில் அதிகமாக பார்க்கப்பட்ட திரைப்படம் மகாராஜா என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் அகில இந்திய விஜய் சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமரன் என்பவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு விஜய் சேதுபதி கணியன் என பெயர் சூட்டியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி அந்த குழந்தையை கொஞ்சி முத்தமிட்டுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.