தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் குடும்பத்தினருடன் பார்த்து ரசிக்கும் படங்கள். இவர் குழந்தைகளுக்கு பிரியமான நடிகராவார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு ராணுவ வீரர் பற்றிய கதை ஆகும். இந்த படத்தில் சாய் பல்லவி ஹீரோயின் ஆக நடிக்கும் நிலையில் படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அமரன் படத்தின் டிரைலர் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தற்போது பட குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர் நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த ட்ரெய்லர் வீடியோ இன்று பான் இந்தியா மொழிகளில் வெளியாகும் நிலையில் தமிழில் நடிகர் கமல்ஹாசன் டிரைலர் வீடியோவை வெளியிடுகிறார். அதன் பிறகு தெலுங்கில் நடிகர் நானியும், ஹிந்தியில் நடிகர் அமீர் கானும், கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமாரும், மலையாளத்தில் நடிகர் டெவினோ தாமஸ் வெளியிடுகிறார்கள். இந்த தகவலை போஸ்டர் வெளியிட்டு பட குழு அறிவித்துள்ளது.