
ஐபிஎல் 2025 18 வது சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபி அணியானது 16.2 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 59 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இந்நிலையில் திடீரென்று ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்து கோலியின் கால்களில் விழுந்துள்ளார். இதனால் போட்டி ஒருசில நிமிடங்கள் தடைபட்டுள்ளது. பின்பு மைதானத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் அத்துமீறிய ரசிகரை வெளியேற்றினார்கள். இதேபோன்றுதான் 2023 ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ஆஸ்திரேலியா ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி விராட் கோலியை கட்டிபிடிக்க முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#KKRvsRCB #IPL2025
A fan breached the field and touched Virat Kohli's feetpic.twitter.com/Ck70YHyas8— BOBjr (@superking1816) March 22, 2025