234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 10, +2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் இன்று பரிசளிக்கிறார். விஜய் மக்கள் இயக்கமாக இல்லை இம்முறை த.வெ.க தலைவராக மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை அளிக்கப் போகிறார் விஜய்.  இதற்கு ஆர்வமாக மாணவர்கள் காத்திருக்கிறார்கள். மேலும் யாரும் பசியோட இருக்கக் கூடாது என்பதற்காக சுட சுட சாப்பாடு, வடை, பக்கோடா என விருந்து தயார் நிலையில் உள்ளது.

விஜய் கல்வி விருது வழங்கும் விழாவுக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு சைவ உணவு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விழா நடைபெறும் அரங்கிற்குள் செல்ஃபோன், பேனா, புத்தகம் போன்றவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த விழாவில், செல்ஃபி எடுப்பது, ஆட்டோகிராஃப் வாங்குவது போன்ற செயல்கள் அரங்கேறியதால் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.